ஆளுமை உளவியல் |
மனித ஆளுமை சமூக வரலாற்றின் தொடர்ச்சியான பதிவுக ளால் உருவாக்கப்படுகின்றது. சமூக இருப்பு (ளுழஉயைட நுஒளைவநnஉந) ஆளுமை யின் இருப்பாகின்றது. சமூக நிர்ணயிப்பின் பொருண்மியக் காரணி களின் வளர்ச்சியும் அவற்றினூடே தோற்றம் பெறும் பன்முகப் பாங்கு களும் ஆளுமையிலே பன்முகத் தோற்றப்பாடுகளையும் பன்முக உறு பண்புகளையும் (வுசயவைள) உருவாக்கிய வண்ணமுள்ளன. தனிச் சொத் துரிமையின் வளர்ச்சியோடு மனிதரின் தனித்துவங்களைக் கண்டறி யும் ஆய்வுகள் முன்னெடுக்கப்படலாயின. மனிதர் பிரபஞ்சத்தின் நடுவன் பொருளாக்கப்பட்டனர். அந்நிலையில் ஆளுமை, தலைமைத்துவம் போன்ற எண்ணக்கருக்கள் உளவியலின் ஆய்வுப் பொருட்களாயின. |